சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் "அயலான்" கலாட்டா! ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூ...
தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது! தமிழ் சினிமாவின் சாபக்கேடு நல்ல திரைக்கதைகளோடு காத்திருக்கும் திறமையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்றவாறு "இணக்கமாக" படம் எடுப்பவர்களுக்கு மாநில விருது, தேசிய விருது மானியம் என பல சலுகைகளை வாரி வழங்கும் கேவலம்தான் கால காலமாக நடந்து வருகிறது. நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றார் என்றதும் அதன் உள் அரசியல் தெரியாமல் இந்தியாவே கொண்டாடியது. நிஜத்தில் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இந்தியர்களை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கேவலப்படுத்தி அருவருப்பாக சித்தரித்து வேடிக்கை மனிதர்களாக காண்பித்திருப்பார்கள். இந்தியர்களை அத்தனை கேவலமாக சித்தரித்த அந்த படத்தில் பணியாற்றியதால் தான் ரஹ்மான் ஆஸ்கர் வ...
சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..   நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது... நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்க...
மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை!

மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை! மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்ஸ்டர் வெளியாகி வெற்றி பெற்ற பார்முலாபடி இந்த படத்தையும் பள்ளி விடுமுறை நேரத்தில் மே மாதம் வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்....
பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் - டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு ! மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். *பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜரிவால், 'டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன். நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். டெல்லி ...
இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை! போர்க்குற்ற சிக்கல்!!

இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை! போர்க்குற்ற சிக்கல்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கையின் ராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு போர்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. போரின்போது இவர் இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் இயங்கி வந்த ராணுவப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஷவேந்திர சில்வா மீதான போர்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. மற்றும் பிற அமைப்புகளால் ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமானவையும், நம்பகமானவையும் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். போர்குற்றச்சாட்டுகள் காரணமாக, ஷவேந்திர சில்வாவை ராணுவ தளபதியாக நி...
கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்… இங்கல்ல போலந்தில்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கால்வாய் திட்டத்தை எதிர்த்து தம்பதியின் நிர்வாண போராட்டம்... இங்கல்ல போலந்தில்! போராட்டம் நடத்துவதில் கூட வினோதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதில் வெளி நாட்டவர்களை மிஞ்ச முடியாது... ஒரு கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தம்பதி நிர்வாணமாக படுத்து போராட்டம் நடத்தியதோடு சுற்றிலும் ஆட்களை நிறுத்தி அவர்கள் கைகளில் "காதல் செய்யுங்கள்... கால்வாய் வேண்டாம்" என எழுதப்பட்ட அட்டைகளை பிடித்திருந்தார்கள். போலந்து நாட்டில் பால்டிக் கடலில் இருந்து கிழக்கு கடலோர பகுதியை பிரிக்கும் குறுகலான ஒரு நில பரப்பை குறைத்து ஒரு கால்வாய் அமைக்கும் திட்டத்தை ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி நிறைவேற்ற விரும்புகிறது. இப்படி செய்வது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்கு தேவையாக இருக்கிறது என்று அந்த கட்சி கூறுகிறது. இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது சுற்றுச்ச...
ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு அணிகள் மோதும் அட்டவணை விவரங்களும் வெளியாகி உள்ளது.   இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது....
அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அஜீத் "தல" ரஜினி "மல" இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்! விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை. நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’. விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந...
உசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்!

உசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் கம்பாலா பந்தயம் பிரபலமானது. அந்தவகையில் மங்களூரு அருகே ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா என்ற வாலிபர். இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் ஆகும். தட்சினா கன்னடத்தில் உள்ள மிஜாரை சேர்ந்தவர் சீனிவாச கவுடா பருவகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு 4 விதமான கம்பாலா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்....