வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்
ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியுடன் மணிரத்னம் தனது புதிய பட வேலையை தொடங்கி இருக்கிறார். கோவா அருகில் உள்ள மலை உச்சியில் பாடல் ‘கம்போசிங்’ நடந்தது.
‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார்.
கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந...









