வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்! இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது. அதனைதொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆய்வு கூட்டங்கள் அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரானா வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கொரனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கு வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனி வார்டுகள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்...
புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1-3-2020 முதல் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு பெற ( குடிசை மற்றும் விவசாயம் நீங்கலாக ) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ,மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்கள் தாழ்வழுத்த புதிய மின்னிணைப்பு பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தின் மூலம் ( www.tangedco.gov.in ) இணையவழி விண்ணப்பத்தில் கோரும் விவரங்களை பூர்த்தி செய்து துணை ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்யப்பபட்ட பதிவேற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது....

நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார். அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி. மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை. புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...
ஆன்லைன் வர்த்தக மோசடியை சொல்லப்போகும் விஷாலின் “சக்ரா”

ஆன்லைன் வர்த்தக மோசடியை சொல்லப்போகும் விஷாலின் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியீடு. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் 'சக்ரா'. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விஷாலிடம் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட.. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதுவும் மாற்ற வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வ...
அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 என்று அறியப்படும் இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் தயாராகி வருகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்ட படப்பிடிப்பில் டெல்லி ஆக்ரா  உள்ளிட்ட இடங்களில் துரத்தல், சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.சண்டைக் காட்சிகளோடு யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....
லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்! பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் இவருக்கு பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ஜோடி. . இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இவர்களோடு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் லாஸ்லியாவின் அப்பாவாக நடிக்கிறார். அக்னி சிறகுகள், மாஸ்டர் உட்பட பல பெரிய படங்களில் JSK சதீஷ் படுபிசியாக நடித்து வருகிறார்....
மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்! மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இப்படத்தில் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரனவ்லால் உள்ளிட பலர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் வரும் மார்ச் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் கலைப்புலி தாணு வெளியிடவுள்ளார். தமிழில் ஆர்.பி.பாலா வசனத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திர புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வ...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார். கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை. பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குறைவாக...
மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை! சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன  அஜீத்!

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவின் புகழ் உச்சியில் இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது திடீரென மரணம் அடைந்தார். இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மும்பை வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனிகபூர் குடும்பத்தாருடன் நடிகர் அஜித்தும் கலந்துக் கொண்டார். போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் இப்போது அஜீத் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்திலும் அஜீத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....