சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதனை வண்மையாக கண்டித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகள் தொடங்கி ஒவ்வொரு குடிமகன் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
ஏழை - நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்துத் தரப்பு ம...









