ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானா அழியாது தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானாவை ஒழித்து விட முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலகம் முழுவதும் மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி பல லட்சம் மக்களை பாதிப்பில் ஆழ்த்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் மட்டுமே வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவலை குறை...









