புதன்கிழமை, மே 15
Shadow

விமர்சனம்

ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

ப்ளீஸ் பாக்காதீங்க… லவ்வர் கோடங்கி விமர்சனம் 2.5/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      நாயகன் மணிகண்டனும், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியாவும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள். ஸ்ரீகெளரி வேலைக்கு போகிறார். மணிகண்டன் கடை வைக்கும் முயற்சியில் இறங்கி அதில் சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, எதற்கெடுத்தாலும் காதலி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார். ஒரு சூழ்நிலையில் மணிகண்டனை விட்டு பிரிய முடிவு எடுத்து பிரேக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா. அதை மணிகண்டனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஏற்க மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறார். மணிகண்டனின் தொல்லையை தாங்க முடியாத ஸ்ரீ கெளரி ப்ரியா என்ன முடிவு எடுத்தார்? மணிகண்டன் என்ன ஆனார் என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் மீதிக்கதை. மணிகண்டன் கதாபாத்திரம் சதா சிகரெட்,...
பாக்காதீங்க ப்ளீஸ்… ”சிக்லெட்ஸ்” திரைப்பட விமர்சனம் 2.5/5

பாக்காதீங்க ப்ளீஸ்… ”சிக்லெட்ஸ்” திரைப்பட விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ”சிக்லெட்ஸ்” கதையின் நாயகிகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர், அவர்களின் பெற்றோர்களுக்கு இவர்கள் குறித்து தனித்தனி கனவு இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பெண்களும் வேறு கனவில் இருக்கிறார்கள். வயசு கோளாறால் காதலில் விழுவதால் காமத்தை தேட முடிவு செய்கிறார்கள். அதற்காக, இந்த மூன்று ஜோடிகளும் தங்களின் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர், பிறகு இவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள், அவர்களை தேடி போகிறார்கள்.  கடைசியில் அந்த மூன்று ஜோடிகளும் பார்ட்டிக்கு சென்று தங்களை நினைத்ததை செய்தார்களா? அல்லது பெற்றோர்கள் அவர்களை தடுத்தார்களா? என்பதே ”சிக்லெட்ஸ்” படத்தின் மீதி கதை… படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் கிளாமர் காட்சிகளில் விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார். காதல் மற்றும் காமம் இரண...
‘‘மறக்குமா நெஞ்சம்” ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

‘‘மறக்குமா நெஞ்சம்” ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5   கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரக்‌ஷன், கூடபடிக்கும் மலினாவை காதலிக்கிறார். கடைசிவரை தனது காதலை சொல்லாமல் பள்ளி படிப்பை முடிக்கிறார். பல ஆண்டுகள் முடிந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு எழுதிய 12ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், வேறு வழி இல்லாமல் வருத்தத்தோடு மீண்டும் அந்த பள்ளிக்கு வர, ரக்‌ஷன் தனது மட்டும் மீண்டும் காதலியை பார்க்கப் வ...
தூக்குதுரை விமர்சனம் 2.5/5

தூக்குதுரை விமர்சனம் 2.5/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம். கதைப்படி சில காட்சிகளிலேயே கொல்லப்பட்டுவிடுகிறார் யோகிபாபு.அதன்பின் அவரைப் பயன்படுத்த இயக்குநர் கடைபிடித்திருக்கும் உத்தி படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. அரசகுடும்பத்து வாரிசு என்பதற்கேற்ற அழகுடன் இருக்கிறார் இனியா. திரைக்கதையில் அவருக்கு குறைவான இடம்தான். ஆனால் வரும் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார். நான்கடவுள் இராசேந்திரன் தலைமையிலான மகேஷ், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர்தான் படத்தைத் தொடங்க...
கிரிக்கெட் விளையாட்டை கட்டி வைத்துள்ள “நூல்” அறுத்த புளூ ஸ்டார் கோடங்கி விமர்சனம் 4/5

கிரிக்கெட் விளையாட்டை கட்டி வைத்துள்ள “நூல்” அறுத்த புளூ ஸ்டார் கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ரஞ்சித் தயாரிப்பில் புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது புளூ ஸ்டார். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வீ, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் நடித்த புளூ ஸ்டார் இந்த வார வரவில் மிக வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறது. வழக்கமாக ரஞ்சித் கம்பெனி படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி வேதனை நியாயங்களை சொல்லி வந்தார்கள். முதல் முறையாக ஊருக்கு நன்மை என்றால் சாதி வட்டத்தில் சிக்காமல் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்ற ஒற்றை வரி சித்தாத்தத்தை கையில் பிடித்து படமாக்கி இருக்கிறார்கள். போற போக்கில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் சாதி வெறியையும் பட்டவர்த்தனமாக தோலுரித்து தொங்கவிட்டிருக்கிறார் "புல்லட் பாபு" கதாபாத்திரம் மூலம். அப்படி என்ன கதைன்னு யோசிக்கிறீங்களா... "வழக்கம் போல ஒரு கிராமம் காலனி பகுதி ஊர் பகுதி இதில் உள்ள பசங்க 2 குழுவா கிரிக்கெட் ...
தோற்ற காதல் ஜெயித்த அன்பு கலவையான ”மெரி கிறிஸ்துமஸ்” – கோடங்கி விமர்சனம் 3.5/5

தோற்ற காதல் ஜெயித்த அன்பு கலவையான ”மெரி கிறிஸ்துமஸ்” – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடி ராத்திரியில் திரிஷா கைய புடிச்சிகிட்டு ரோட்டில் நடந்து போனா அது விஜய்சேதுபதிக்கு கிடைக்காத காதல் 96 படம்… அதுவே குழந்தைய தூக்கிக்கிட்டு நடு ராத்திரியில் கத்ரீனா கைஃப் கூட நடந்து போனா அது விஜய்சேதுபதியோட கொலையான காதல் மெரி கிறிஸ்துமஸ்.. அப்பாவியா தெரியும் விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பாக்குற எல்லாறையும் இழுக்குது. அவருடைய காதல்கதையைச் சொல்வதும் அதில் இருக்கும் படிப்படியான முன்னேற்றம் சுவாரசியம். கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு ஷாக் ரகம்தான் ஆனா அப்ளாஸ் என்னமோ விஜய்சேதுபதிக்குத்தான். ஒரு குழந்தைக்கு அம்மாவா வந்தாலும் கத்ரினா கைஃப் நடிப்பில் அசத்துகிறார். சோகம்…  ஆட்டம்… அழகு என எதிலும் குறைவில்லை. படம் தொடங்கிய சில நொடிகளில் விஜய்சேதுபதியிடம் தன் கணவர் குறித்து  கத்ரீனா கைஃப் பேசும் அந்த ...
ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5

ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்கிற கதைன்னு சொன்னா முன்னாடி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவாங்க… இனிமே அந்த லிஸ்ட்ல அருண்விஜய் சேர்ந்துடுவாரு… மிஷன் சேப்டர் 1 அப்படித்தான் இருக்கு! கதை என்ன சொல்லுதுன்னா… உயிருக்கு ஆபதான நிலையில் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய்,  அங்கே எதிர்பாரத பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார். அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைப்பதற்காக பயங்கரவாத குழு மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறது. இதனால், சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட, அனைவரையும் தடுத்து நிறுத்தும் அர...
பைட் கிளப்பில் சண்டை இருக்கு… சரக்கு இல்லை- திரைப்பட விமர்சனம் 2.5/5

பைட் கிளப்பில் சண்டை இருக்கு… சரக்கு இல்லை- திரைப்பட விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  பாக்ஸிங்கை உயிராக நினைத்து வாழும் பெஞ்சமினுக்கு, வடசென்னைக்காரன் என்ற அடையாளம், அவன் மேலே செல்வதற்கு முட்டுக்கட்டையாக நிற்க, திறமை இருந்தும் சோபிக்காமல் போகிறார். இதில் மனம் உடைந்த பெஞ்சமின், தான் இழந்ததை தான் ஊர் இழக்கக்கூடாது என்று எண்ணி தன்னுடைய ஊருக்காக வடசென்னை ராஜன் போல வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தம்பி ஜோசப்போ கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று கொண்டு இருக்கிறான். இதை பெஞ்சமின் பலமுறை கண்டித்தும் தம்பி கேட்ட பாடில்லை. இதனிடையே, சம்பவம் ஒன்றில், தம்பியையும் கிருபாவையும் நடுரோட்டில் வைத்து பெஞ்சமின் பொளந்து கட்ட,இனி வேலைக்கு ஆகாது என்று, அண்ணனை கிருபாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப். சம்பவத்தில் யார் ஜெயிலுக்கு போவது என்ற பேச்சு வர ஜோசப்பை ஜெயிலுக்கு போக சொல்லும் கிருபா ஒரு வாரத்தில் வெளியே...
“அவள் பெயர் ரஜினி” விமர்சனம் 2.5/5

“அவள் பெயர் ரஜினி” விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே  “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை முந்திச்சென்று துப்பறியும் வேடம் காளிதாஸ் ஜெயராமுக்கு. அதைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார். பாசப்பிணைப்பும் உண்மையை அறியும் தவிப்பும் சிறப்பு. நமீதாப்ரமோத், பாதிக்கப்படுகிற பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களிலேயே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். காவல்துறை விசாரிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அவ்வளவு எதார்த்தம். படத்தின் பெயரிலிருக்க...
கட்டில் – திரைப்பட விமர்சனம் 2.5/5

கட்டில் – திரைப்பட விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கட்டில் படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார் என்பது ஒருவரிக்கதை. பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை இடம்மாற்றுவதிலும் சிக்கல்கள். இவற்றின் விளைவுகள்தாம் படம். நாயகன் கணேஷ்பாபு ரசித்து நடித்திருக்கிறார். அவர் சிரிக்கும் காட்சிகளைவிட சோகக்காட்சிகள் அதிகம். சிருஷ்டிடாங்கேவுக்கும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து நன்றாக நடித்து தனக்கும் படத்துக்கும் பலமாக இருக்கிறார். மூத்தோர்களின் பிரதிநிதியாக இருக்கிறார் கீதாகைலாசம். அவருடைய பாத்திரப்படைப்பு சிந்திக்க...