திங்கட்கிழமை, மே 20
Shadow

REVIEWS

800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5   இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயோபிக்கள் நிறைய செய்யப்பட்டுள்ளன, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் திரையில் அவரது அண்டர்டாக் முதல் சூப்பர்ஸ்டார் கதையைப் பெறுகிறார்கள். ஒரு மாற்றத்திற்காக, பெரிய திரையில் முத்தையா முரளிதரனின் கதையை 800 என்ற வடிவத்தில் சொல்ல வித்தியாசமான கதையுடன் வருகிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி. முரளிதரனின் வாழ்க்கை மற்றும் அவரது சிறு வயது முதல் அவரது 800வது விக்கெட்டு வரை நடந்த சம்பவங்கள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிகழ்வாக அமைந்தது. மேலும் இப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் - அவர் எதிர்கொள்ள வேண்டிய அரசியல், ஒரு இலங்கையர் மற்றும் ஒரு தமிழர் இடையே கயிற்றில் நடப்பதை நிரூபிக்கும் தொடர்ச்சியான போராட்டம் ஆகியவற்றிலிருந்த...
ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம் 3/5

ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம்   பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது. ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட  குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை. வழக்கமான...
எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் S.ஹரி உத்ரா. சமூகத்திற்கு தேவையான கதையை எடுத்த இயக்குனருக்கு அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. கதாநாயகன் சரத் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல், கோபம் என அனைத்திற்கும் ஒரே முகபாவனையை கொடுத்து சலிக்க வைத்துள்ளார். பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இவர் குப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கோச்சிங் கொடுத்து முன்னேற்றி வருகிறார். இதில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கால்பந்தாட்டத்தில் ஒழுங்காக கவனம் இல...
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5 கதைப்படி ராணுவ வீரரான ஷாருக்கான், ராணுவத்துறையில் நடந்த ஒரு மோசடி குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அதனால், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாருக்கானை தேசதுரோகியாக முத்திரை குத்தி கொலை செய்துவிடுகிறார். ஷாருக்கானின் மனைவி தீபிகா படுகோனே கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது அப்பாவின் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதோடு, அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்காக புதிய வழியில் போராட்டம் ஒன்றை அறங்கேற்றுகிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பதை அதிரடியாகவும், அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார். அப்பா விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் ...
”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5

”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    ”பரம்பொருள்” சரத்துக்கு கை கொடுக்குமா? கோடங்கி பார்வை 2.5/5   கவி கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் பரம்பொருள். இதில் சரத்குமார், அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பர்தேஷி ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது. சிலை கடத்தலை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பரம்பொருள் படமும் சிலை கடத்தலை வைத்து தான் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இயக்குனர் இதில் வித்தியாசம் காட்டி இருக்கிறார் சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அமிதாஷ் ஆதி என்ற கதாபாத்திரத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வருகிறார். அப்படிதான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத...
லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5

லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5   தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ரொம்ப லக்கிமேன் என்றால் அது யோகிபாபுதான்… லக்கிமேன் என்ற பெயரிலேயே யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கிறது.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே தான் ஒரு அன் – லக்கி ஆசாமி என கருதிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தான் தொட்ட காரியம் எதுவும் சரிவராது என நினைத்தபடி மனைவி மகனுடன் வாழ்கிறார். இப்படியிருந்த யோகிபாபு வாழ்க்கையில் ஒருநாள், சிட்பண்ட் நிறுவனத்தில் கார் பரிசாக கிடைக்கிறது., இந்த கார் தான் தன் வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டமாக நினைக்கிறார். மனைவியோ அந்த காரை விற்று, தொழில் தொடங்க சொல்கிறார். ஆனால், யோகிபாபுவிற்கோ அப்படி செய்ய விரும்பாமல்,தனது அதிர்ஷ்டம் இந்த கார் என்று ...
ரஜினி – நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் – கோடங்கி விமர்சனம் 3.5/5

ரஜினி – நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ரஜினி - நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் - கோடங்கி விமர்சனம் 3.5/5 ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர். மிக நேர்மையான துணிச்சலான ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த் ரவி மருமகள் மிர்னா மற்றும் பேரன் ரித்திக் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார ரஜினிகாந்த். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரவியை அந்த கும்பல் கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள். நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி கலங்கும் ரஜினி அந்த ரவுடி கும்பலை வெறித்தனமாக தேடித் தேடி பழி தீர்ப்பது தான் படத்தின் கதை. கதை என்னமோ பழைய உருட்டாக இருந்தாலும் மேக்கிங்கில் வித்தியாசம் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வெற்ற...
எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” சினிமா ஆட்டம் ஜெயிக்குமா?   கோடங்கி விமர்சனம் 2.5/5   கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் அதுவும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார் யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. கதை ரொம்ப சின்னது… ”ஹரிஷ் கல்யாணும் இவ...
“அநீதி” அசத்துகிறதா? அசதியை ஏற்படுத்துதா? கோடங்கி விமர்சனம் 2.5/5

“அநீதி” அசத்துகிறதா? அசதியை ஏற்படுத்துதா? கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    "அநீதி" அசத்துகிறதா? அசதியை ஏற்படுத்துதா? கோடங்கி விமர்சனம் 2.5/5 வெயில்,அங்காடி தெரு என யதார்த்தங்களை பதிவு செய்த வசந்த பாலனின் அடுத்த படைப்புதான் "அநீதி" பணக்கார வீட்டில் வேலைக்காரர்கள் மீது அன்றாடம் நடக்கும் "அநீதி" அவலத்தை ஆவேசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.   அர்ஜுன் தாசின் ஆக்ரோஷமான சைக்கோத்தனம் சில இடங்களில் அட டாவும்... பல இடங்களில் அய்யோவும் போட வைக்கிறது. நல்ல மேனரிசம்... அந்த குரலும் கைகொடுக்கிறது... ஆனால் அத்தனை ஆக்ரோஷம் அதிகம்! படத்துக்கு படம் துஷாரா விஜயனின் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் உண்டு... பணக்கார வீட்டு வேலைக்காரியாக வாழ்ந்திருக்கிறார்... பணக்கார பெண்ணாக வரும் சாந்தா தனஜெயன் பணக்கார திமிரிலும், பாசத்துக்கு ஏங்கும் தாயாகவும் அசத்துகிறார்... வெளி நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்த கதாபாத்திரம் நெத்தி...