REVIEWS

அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் - விமர்சனம் தவணையில் எடுக்கும் வண்டிகளுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு எடுத்து வரும் கேரக்டர் விக்ரம். அப்படி வண்டி எடுக்கப்போன இடத்தில் தமன்னாவை பார்க்கிறார்... பக்கென காதல் பற்றிக்கொள்கிறது... அடிதடியில் இருக்கிற விக்ரம் ஐயர் பெண் தமன்னா காதல் கைகூடியதா... வில்லன்கள் என்ன செய்கிறார்கள்... யார் வில்லன் என்பதுதான் ஸ்கெட்ச் கதை. ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்
உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

CINI NEWS, MOVIES, REVIEWS, டிரைலர்கள், திரைப்படங்கள்
அன்பான அக்காவையும், மாமாவையும் கொடூரமாக கொல்லும் கந்து வட்டி கும்பலை அவர்களோடு ஒருவனாக பழகி பழி வாங்க நினைப்பதே உள்குத்து. தலைப்பு ரொம்ப அழுத்தமாக இருக்கிறது. அந்தளவுக்கு படம் இருக்கிறதா... முட்டம் என்ற மீனவக் குப்பத்தின் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) அதே பகுதியில் பில்டப்பில் காலத்தை ஓட்டும் சுறா சங்கர் (பால சரவணன்) தன் வீட்டுக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் அவரது தங்கை கடலரசியும் அவனது பாட்டியும் உள்ள அந்தச் சிறிய குடும்பத்தில் இணைகிறான் ராஜா. அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்கா மணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) படகு செய்யும் தொழில் செய்துகொண்டே கந்து வட்டி தொழிலையும் செய்துவருபவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி,
வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்கா
காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ – விமர்சனம்

காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
  காதலித்தவர்கள் மட்டுமல்ல காதலிப்பவர்கள் மனங்களையும் அவர்கள் பொழுதுகளையும் களவாடும் ‘களவாடிய பொழுதுகள்’ - விமர்சனம் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் பிரிந்து வேறு இணையோடு வாழும்போது தங்கள் காதல் ஜோடி இப்போது எப்படி இருப்பார்களோ என எண்ணுவதுண்டு.அன்று நேசித்தவர்களை திடீரென நேரில் பார்த்தால் காதல் உள்ளம் எப்படி இருக்கும் ? மீண்டும் பழைய நினைவுகளில் சிக்கி சின்னபின்னப்படும் அந்த வலியை உணராதவர்கள் வெகு குறைவு... . கடந்து போன- தொலைந்து போன தங்களின் வாழ்க்கையை , அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று ஏங்குவதுண்டு. ஆனால் பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் போது நினைத்த அளவுக்கு சகஜமாக சந்தோஷமாக இருக்க முடியுமா? அப்படித்தான் இந்தக் காதலர்களும் சந்திக்கிறார்கள். அதன்பின் அவர்கள் இலகுவாக இருக்க முடியவில்லை .தங்கள் காதல் உணர்வுகள் மீண்டும் கிளர்ந்து
நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்

நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் - விமர்சனம் ஆக்‌ஷன் ஹீரோ ஆக தன்னை முன்னிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார் சந்தானம். விமர்சனத்தை பார்ப்பதற்கு முன் ஹீரோ ஆக நிலை நிறுத்தி கொள்ள சந்தானம் ரொம்பவே மெனக்கொட்டிருக்கிறார். உடல் அமைப்பிலும், நடனத்திலும், ஆக்‌ஷனிலும் நடிப்பிலும்... ஆனால் அவரின் வழக்கமான காமெடி நையாண்டி முத்திரை பல இடங்களில் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி கதை... சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார் சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில்
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
  அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அதிதியின் பெற்றோர் அதிதியை வெறுத்து ஒதுக்குகின்றனர். தமது மகள் தவறான வழிக்கு போனதால் தான் அவளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். பின்னர் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட அதிதியிடம் போல
சென்னை 2 சிங்கப்பூர்  விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் பாஸ்போர்ட், பணத்தையும் பறிகொடுக்கிறார். இவ்வாறாக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கோகுல் ஆனந்த் சொந்த நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அங்கு நடக்கும் ஷூட்டிங் ஒன்றை பார்த்து, அங்கு செல்கிறார். அங்கு வீடியோ எடுக்கும் சத்யாவிடம் தான் ஒரு இயக்குநர் என்று கூறி தனது நிலையை கூறி உதவியையும் கோருகிறார். பின்னர் இருவரும் நண்பர்களாகின்றனர். சத்யா தனக்கு தெரிந்த தயாரிப்பாளரிடம் பேசி கோகுல் ஆனந்துக்கு வாய்ப்பு வாங்கி
பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா