வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: கோடங்கி விமர்சனம்

அரண்மனை 4 மிரட்டலா? உருட்டலா? கோடங்கி விமர்சனம் 3/5

அரண்மனை 4 மிரட்டலா? உருட்டலா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  அரண்மனை 4 மிரட்டலா? உருட்டலா? கோடங்கி விமர்சனம் 3/5   வக்கீலாக இருக்கும் சுந்தர் சி தன் அத்தை கோவை சரளாவுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இவரது தங்கை தமன்னா சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஆண்டுகள் பல செல்ல ஒரு காட்டுக்கு நடுவில் இருக்கும் அரண்மனையில் ஒரு மகன் மகளோடு வாழ்ந்து வரும் தமன்னா சந்தோஷ் தம்பதியினர் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட வக்கீல் சுந்தர் சி அந்த அரண்மனைக்கு துப்பு துலக்க வருகிறார். வந்த இடத்தில் அவர்களது இறப்புக்கு காரணம் பேய்  எனக் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து தமன்னாவின் குழந்தைகளை அந்தப் பேய் கொல்ல துடிக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து குழந்தைகளை சுந்தர் சி காப்பாற்றினாரா, இல்லையா? அந்தப் பேய் ஏன் தமன்னா சந்தோஷ் தம்பதியினரை கொலை செய்தது? என்பதே அரண்மனை 4 படத்தி...
வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கோடங்கி விமர்சனம் வேழம் வித்தியாசம்!   ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார். காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது. 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
”பன்றிக்கு நன்றி சொல்லி” சிரிப்புக்கு கியாரண்டி -கோடங்கி விமர்சனம்

”பன்றிக்கு நன்றி சொல்லி” சிரிப்புக்கு கியாரண்டி -கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  டார்க் காமெடி படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் பேசப்படும். அப்படி பேசு பொருளாக மாறிய படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி. தலைப்பைப் போலவே படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை. சரி என்னதான் கதை... பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன சின்ன பன்றி சிலையை வைத்திருக்கிறார். இந்த சிலையை வைத்திருபவர்கள் செல்வ செழிப்பில் இருப்பார்கள் என்பதால் பலர் அந்த பன்றி சிலையை திருட முயற்சிக்கிறார்கள். எப்படியோ அந்த சோழ தேசம் வருகிறது. அங்கே சிலை மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது. இது நடந்து பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை. இதை தெரிந்து கொண்ட ஒரு ரவுடி ஆராய்ச்சியாளரைக் கொன்று, சிலையை கைப்பற்றிச் செல்கிறான். அந்த ரவுடியுடன் இருந்த 2 பேர் அந்த சிலையை எங்கோ மறைத்து வைக்கி...
படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க.. ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு... கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான். துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க... கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க...
கல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்

கல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இறச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரி லாரியாக கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவத்தை கொஞ்ச நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசினார்கள். இதை மைய கருவாக எடுத்து "கல்தா" என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. கேரளா - தமிழக எல்லையில் உள்ள தன்னிலங்காடு கிராமமதான் இந்த கழிவுகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட கிராமம். மனித வாழ்வாதாரத்தை கெடுக்கும் நச்சு கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எப்படி துணை போகிறார்கள். கடைசியில் அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் அந்த கிராமத்தை என்ன செய்தது என்பதுதான் கல்தா கதை. மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்த ஆண்டனி இந்த படத்திலும் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார். ஆண்டனியுடன் சிவ நிஷாந்த் என்பவரும் இன்னொரு கதா நாயகனாக நடித்து...
“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்... படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க... தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது... அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம். யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி... அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு... சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது... கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல... தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம். அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சு...
கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே... அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த். அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை...
சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான...