சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர், 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்து, தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது என்று கூறினார். இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி  போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது. கூட்டணியில் அத...
இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  கேரளாவில் கடந்த 2020 ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதனையடுத்து, திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்பவரை மேயராக அறிவித்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார். அது திருவனந்தபுரம் போன்ற மாநிலத் தலைநகருக்கு மேயரானது கூடுதல் சிறப்பாக அமைந்தது. அவருடைய அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இந்த உயரத்தை அவர் எட்டியிருந்தார். தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...
இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12 ஆயிரத்து 604 வார்டு பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் போல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களிடம் தங்களின் வாக்குறுதிகளை கூறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதன்பிறகு வேட்பாளர்கள் தங...
நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை 45- வதுபுத்தக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பாபாசி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உரைநடைக்கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி, புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கான பொற்கிழி விருது பால் சக்கரியா, ஆங்கலத்திற்கான பொற்கிழி விருது மீனா கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது. பபாசி விருதுகளான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது ச.மெ.சோமசுந்தரம், சிறந்த பதிப்பாளருக்கான விருது ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பொன்னழகு, குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது திருவை பாபு, பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், நெல்லை க.ம...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது....
பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு!

பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிமீ வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும்  என்றும் மத்திய அரசு கூறி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சாதனம் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முன்பு முன்மொழிந்தது. இது ...
வேதா  இல்லத்தை வாங்கும் திட்டமில்லை டெபாசிட் தொகை 68 கோடியை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்- தமிழக அரசு!

வேதா  இல்லத்தை வாங்கும் திட்டமில்லை டெபாசிட் தொகை 68 கோடியை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்- தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்  செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட  வேதா  இல்லத்திற்கு  இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான  வரி  பாக்கி  ரூ.36.9  கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.  மனுக்களை விசாரித்த நீதிபதி,  அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வரு...
பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்!

பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, டெல்லி செங்கோட்டையிலுள்ள கொடிக் கம்பத்தில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடியை பஞ்சாபி நடிகர் தீப் சித்து என்பவர்தான் ஏற்றினார். அதனை அவர் ஒப்புக்கொண்டார். அவர் குறித்து கூறிய விவசாயிகள் அமைப்பு, ‘அவர் ஒரு சீக்கியர் அல்ல. அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்று குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். சுமார் 70 நாள்கள் சிறை விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 17-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில், குண்டிலில் - மனேஷ்வர் - பல்...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ...
சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தக காட்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக காட்சியில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படும். மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம...