சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்....
பெண்வேட கூத்துக் கலைஞருக்கு குடிசையிலிருந்து மாடிக்கு மாற்றம் தந்த விருது!

பெண்வேட கூத்துக் கலைஞருக்கு குடிசையிலிருந்து மாடிக்கு மாற்றம் தந்த விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மெகா ஹிட் ஆன படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் பெண் வேடம் போடும் கூத்து கலைஞர் தங்கராசு ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார்.  ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து ஷாக்கிங்கான அப்ளாசை அள்ளினார். அந்த பட ஹிட் ஆன நேரத்தில் குடிசை வீட்டில்தான் குடியிருந்தார். இவர் 40 ஆண்டுகாலமாக பெண் வேடமிட்டு நடித்த கூத்துக்கலைஞர். தமுஎகச சார்பில் கடந்த ஆண்டில். கலைச்சுடர் விருது அவருக்கு வழங்கப்பட்டது அப்போது அவரது நிலைமையைக் கண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, வீடு கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அழகான மாடி வீடு கட்டப்பட்டுள்ளது.  இன்னும் சில நாட்களில் புதிய இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் தங்கராசு....
பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை. ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர். இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு. கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.  பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே  வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.  ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.   மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கி...
உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.   மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்...
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. தற்...
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களும் பக்தர்களும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு காரணங்களை முன்வைத்து இவ்வாண்டு கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் ப...
பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி!

பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யூ டியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது முதல்கட்டமாக கூகுள் பே மூலமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்....
இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.   நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ...
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் – திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் – திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கமிட்டனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வ...