‘தி டார்க் ஹெவன்’ — கோடங்கி திரை விமர்சனம் 3/5
“பேய் கொல்கிறதா… சைக்கோ கொலையாளியா… இல்ல இந்த இரண்டு பேரையும் தாண்டி வேற யாராவது இருக்கிறார்களா?” — இந்த கேள்வியை வைத்து இரண்டரை மணி நேரத்துக்கு மேல் பார்வையாளரை உட்கார வைக்கிறது ‘தி டார்க் ஹெவன்’.
பாலாஜி இயக்கத்தில் சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் mystery crime thriller.
கதை என்ன?
தமிழ்நாடு–கேரள எல்லையில் இருக்கும் மெக்கரை என்ற மலைக்கிராமம். அங்கே ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இதற்கு காரணம் வனதேவதையின் சாபம் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள்.
அதே நேரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் எழுதிய ‘The Dark Heaven’ என்ற மர்ம புத்தகம் ஒருவரின் கையில் கிடைக்கிறது. அதில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள், ஏன் ஒருவர் இறக்கப்போகி...









