செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

REVIEWS

ஜிவி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் கை கொடுக்குமா?! கோடங்கி விமர்சனம் 2.5/5

ஜிவி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் கை கொடுக்குமா?! கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  பத்திரிகையாளர் யோகி தேவராஜ் பின்னணி குரலுடன் படம் தொடங்கும் போதே ஒருவித அச்சம் ஏற்படுகிறது…டைட்டில் கார்டு போட்டு முடிவதற்குள் படம் பார்ப்பவர்களை உண்மையிலேயே மிரட்டுகிறது. கதைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவராக இருக்கும் கிங்ஸ்டன், எப்படியாது பணத்தை சேர்த்து, தனக்கென்று ஒரு போட் வாங்கி, அதில் கடலுக்கு செல்ல வேண்டுமென நினைத்து...
எமகாதகி சினிமா விமர்சனம் 3.5/5

எமகாதகி சினிமா விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகைகள், விமர்சனம்
    பெரும்பாலும் கிராமத்து கதைகள் குடும்ப உறவுகளை மட்டுமே பேசும். ஆனால் “ரூபாவின் ரகசியம்” இந்த பாரம்பரியத்தைக் கடந்து ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லரை உருவாக்குகிறது. இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் ஒரு சாதாரண குடும்பக் கதையை ஒரு திகில் நிறைந்த அனுபவமாக மாற்றியிருக்கிறார். தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஊர் தலைவர் செல்வராஜ் (ராஜு ராஜப்பன்) அவரது மனைவி சந்திரா (கீதா கைலாசம்) மகன் முத்து (சுபாஷ் ராமசாமி) மகள் லீலா (ரூபா கொடுவாயூர்) மருமகள் ஹரிதா (பிரேமா) கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். லீலா சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு, அவ்வப்போது இன்ஹேலர் பயன்படுத்துவார். மறுபுறம், ஊர் கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் போது, முத்து அவனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் முன்பு கோவிலில் உள்ள கீரிடத்தை திருடி அதை அடமானம் வைத்து வி...
சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5     இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ”சப்தம்”. மூணார் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நூலகத்தில் அடுத்தடுத்து சில மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலைகள் எதனால் நடைபெறுகிறது என்பதை விசாரிக்க பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதி அங்கு வருகிறார். இறந்து போன மாணவர்களின் உடலை பார்க்கும்போது கை, கால், முகம் அனைத்தும் கோணல்மாணலாகவும் உடலில் சைத்தானின் குறியீடு போன்ற ஒன்று இருப்பதையும் பார்க்கிறார் ஆதி. அதோடு அந்த நூலகம் பல வருடங்களுக்கு முன்பு தேவாலயமாக இருந்ததையும் கண்டுபிடி...
டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,மிஷ்கின்,கவுதம் மேனன், ரவீந்தர், ஜார்ஜ் இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து   பள்ளியில் 96 சதவீத மார்க் எடுக்கிற நல்ல பையனாக வரும் பிரதீப் ரங்கநாதன் கூட படிக்கிற ஒரு பெண்ணிடம் காதலை சொல்கிறார். படிக்கிற பையனைவிட கெத்தாக சுத்தும் பையனைத்தான் பிடிக்கும் என அந்த காதலை அந்த பெண் நிராகரிக்க… கல்லூரியில் சேர்ந்த்தும் படிப்பை விட்டுவிட்டு பேரையும் டிராகன் என மாற்றிக் கொண்டு கெத்தாக சுத்தும் பிரதீப். அவரை கூட படிக்கும் அனுபமா பரமேஸ்வரன் அநியாயத்துக்கு காதலிக்கிறார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக மிஷ்கின். படிக்காமல் 48 அரியர் வைத்து கல்லூரியில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் அப்பா அம்மாவிடம் கல்லூரியை முடித்து வேலையில் இருப்பதாக பொய் சொல்லி கெத்து காட்டி வரும் பிரதீப்பை ஒரு கட்ட்த்தில் காதலி அனுபமா கழற...
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
        நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பவிஷ்,அனிகா,ப்ரியா பிரகாஷ் வாரியர்,சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் இயக்கம்: தனுஷ் இசை : ஜிவி பிரகாஷ் தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக ஒரு காதல் கதையில்  அறிமுகப்படுத்தி இருக்கிறார். படம் தொடங்கும் போதே இது ஒரு யூஷுவல் காதல் கதை என்றே தொடங்குகிறது. கல்யாணம் வேண்டாம் என இருக்கும் ஹீரோ தன் அம்மா அப்பா கட்டாயத்தால் பெண் பார்க்க போகிறார். பெண்ணை பார்த்த்தும் ஷாக் ஆகிறார். அந்த பெண் ஹீரோவுடன் ஒன்றாக படித்த பெண் என்பது தெரிய வருகிறது. இருவரும் பழகிய பின் கல்யாணம் என முடிவெடுக்கையில் பிரேக் அப் செய்த காதலியின் கல்யாண அழைப்பு வருகிறது. அந்த காதல் பிரேக் அப் ஆன கதையை தோழியிடம் சொல்கிறார் ஹீ...
தண்டேல் விமர்சனம் 3/5

தண்டேல் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தண்டேல் விமர்சனம் 3/5 ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ராஜு (நாக சைதன்யா) அதே சமூகத்தை சேர்ந்தவர் சத்யா(சாய் பல்லவி). மீனவரான ராஜுவும், சத்யாவும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் கிராமத்து மீனவர்களுடன் சேர்ந்து 9 மாத காலம் மீன் பிடிக்க கிளம்பும்  ராஜூவை சத்யா தடுத்தும் கேட்காமல்  மீன் பிடிக்க சென்றபோது தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜு உட்பட சிக்கிய மீனவர்கள் நாடு திரும்பினார்களா? அவர்களுக்கு என்ன ஆனது என்பதே கதை. முதல் பாதியில் மீன சமூக வாழ்வியல். ராஜு, சத்யாவின் காதல். என நகர்கிறது.  இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் சிக்கியவர்களுக்கு நடக்கும் பிரச்சனை என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. திரைக...
விடா முயற்சி கோடங்கி விமர்சனம் 3/5

விடா முயற்சி கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  விடா முயற்சி கோடங்கி விமர்சனம்     அஜீத் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இன்று ரிலீஸ் ஆன படம் விடா முயற்சி. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜுன் ஜோடியாக ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ் உட்பட பல நடித்திருக்கிறார்கள். ஒரு வரிக்கதை: காதலித்து செய்த கல்யாணம் கசந்து போகும் ஹீரோயின். ஹீரோயினை வழியனுப்ப போகும் வழியில் கடத்தப்படும் ஹீரோயினை மீட்கும் ஹீரோ. ஆங்கில பட பாணியில் முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. அஜீத் ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப ஸ்டெயிலாக வருகிறார். உருகி உருகி காதலிக்க முயற்சிக்கிறார். காதல் மனைவியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்ற அப்பாவியாக  கெஞ்சுகிறார்… ஒரு கட்ட்த்தில் ஆக்ரோஷமாக இறங்கி அடிக்கிறார். படு பயங்கரமாக கார் ஓட்டுகிறார்… கடைசியில் கட்த்தப்பட்ட மனைவியை மீட்டாரா? பிரிய நினைத்த மனைவி மீண்டும் சேர்ந்தாரா? என்பதை விறுவிறுப்பாக ...
நேசிப்பாயா விமர்சனம் 2.5/5

நேசிப்பாயா விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    நேசிப்பாயா விமர்சனம் 2.5/5   தனித்தனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹீரோ-ஹீரோயின் காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஹீரோயினுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கிறது அதனால் காதலர்களுக்குள் சண்டை வந்து காதல் முறிந்து போகிறது. இது நடந்து சில ஆண்டுகளுக்கு பின் போர்ச்சுக்கல் நாட்டில் இந்திய வாலிபரை சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக ஹீரோயின் கைது செய்யப்பட்ட்தாக செய்தி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹீரோ உடனே போர்ச்சுக்கல் போகிறார். அங்கே காதலியை பார்த்தாரா? யார் கொலை செய்தது? காதலி விடுதலை ஆனாரா? காதல் கை கூடியதா? இதற்கெல்லாம் விடை சொல்கிறது நேசிப்பாயா திரைக்கதை. ஹீரோவாக புதுமுகம் ஆகாஷ்முரளி, ஹீரோயினாக அதிதி ஷங்கர், போர்ச்சுக்கல் தொழில் அதிபராக ச்ரத்குமார், அவர் மனைவியாக குஷ்பு, போலீஸ் அதிகாரியாக ...
காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5

காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    காதலிக்க நேரமில்லை கோடங்கி விமர்சனம் 3/5   தனித்துவம், வேலை, சாதனை என ஆணும் பெண்ணும் ஓடிகொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் பெண்ணோடு காதல் இருக்கலாம் ஆனால் கல்யாணம், குழந்தை எல்லாம் அவசியமில்லை என வாழுகிற ஒருவனை நிச்சயதார்த்தம்வரை கொண்டு வந்த ஒரு பெண் திடீரென அவனை ஏமாற்றி ஓட்டம் பிடித்தால் அந்த ஆண் என்ன செய்வான் என்பதை ஒரு லைனாகவும்,  உருகி உருகி காதலித்தவன் கிடைத்த கேப்பில் வேறு பெண்ணுடன் உல்லாசமாய் இருப்பதை பார்த்த ஒரு பெண்ணும் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை இன்னொரு லைனாகவும் எடுத்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இதில் பரபரப்புக்காக ஆண் துணை இல்லாமல் அறிவியல் வளர்ச்சியால் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கதா நாயகி என ஒரு கதையையும், அதற்கு முன்பாக நண்பனுக்காக உயிரணு சேமிப்பு வங்கியில் தன் உயிரணுவையும் சேமிக்...
வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5   அழகான ஹீரோவை அழுக்காக காட்டுவது, வாய் பேச முடியாமல், காது கேட்காத ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோயின்,  குரூர கொடூர கொலை, பாலியல் சீண்டல்கள், தங்கை செண்டிமெண்ட், ஆண்களின் வக்கிரபுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை, இந்து கிறித்துவ மத கலவை என இயக்குனர் பாலாவின் வழக்கமான படம்தான் வணங்கான். கதைப்படி வாய் பேச முடியாத காது கேட்காத அருண்விஜய் தன் தங்கை மீது அதிக பாசத்தோடு இருக்கிறார். அதே நேரம் கடும் முன்கோபகாரனாக இருக்கிறார். அவரை ஹீரோயின் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஒரு விடுதியில் வாட்ச்மேனாக சேருகிறார் அருண்விஜய். அங்கே பார்வையற்ற மாணவிகள் குளிப்பதை ஒரு சிலர் ஒளிந்திருந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதை ஒரு மாணவி எப்படியோ கவனித்து அவர்களை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட...