500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!
500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!
கடன் பிரச்சனை தொடர்பான கைது செய்யப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தினரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டதற்காக ரூ.500 கோடி இழப்பீடு வழங்க கேட்டு, பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை சவுகார்பேட்டை, தங்கச்சாலை தெருவைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை முகுந்த் சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர். சினிமா தயாரிப்பாளர்கள், நட...









