வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பிரச்னையால் ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன. கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன  ...
ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்!

ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படம் ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வொண்டர் வுமன் படத்தின் நாயகி கல் கடோட் மற்றும்ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இப்படத்தை...
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்....
சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையு...
இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் மகளிர் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும். கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்திய...
சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பத...
Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது. மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது. ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் த...
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவிட்டுள்ளார். அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ...
காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார். கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள். இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ...
Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  Ukraine War - உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!   https://youtu.be/vIycmx18WZE