மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மெகா ஹிட் ஆன படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் பெண் வேடம் போடும் கூத்து கலைஞர் தங்கராசு ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து ஷாக்கிங்கான அப்ளாசை அள்ளினார்.
அந்த பட ஹிட் ஆன நேரத்தில் குடிசை வீட்டில்தான் குடியிருந்தார்.
இவர் 40 ஆண்டுகாலமாக பெண் வேடமிட்டு நடித்த கூத்துக்கலைஞர்.
தமுஎகச சார்பில் கடந்த ஆண்டில். கலைச்சுடர் விருது அவருக்கு வழங்கப்பட்டது
அப்போது அவரது நிலைமையைக் கண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, வீடு கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் காரணமாக அழகான மாடி வீடு கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் தங்கராசு....
பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை.
ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர்.
இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.
கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை. பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.
...
“கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை ச...
டார்க் காமெடி படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் பேசப்படும். அப்படி பேசு பொருளாக மாறிய படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி.
தலைப்பைப் போலவே படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
சரி என்னதான் கதை...
பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன சின்ன பன்றி சிலையை வைத்திருக்கிறார்.
இந்த சிலையை வைத்திருபவர்கள் செல்வ செழிப்பில் இருப்பார்கள் என்பதால் பலர் அந்த பன்றி சிலையை திருட முயற்சிக்கிறார்கள்.
எப்படியோ அந்த சோழ தேசம் வருகிறது. அங்கே சிலை மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது.
இது நடந்து பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை.
இதை தெரிந்து கொண்ட ஒரு ரவுடி ஆராய்ச்சியாளரைக் கொன்று, சிலையை கைப்பற்றிச் செல்கிறான்.
அந்த ரவுடியுடன் இருந்த 2 பேர் அந்த சிலையை எங்கோ மறைத்து வைக்கி...
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கி...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும்.
தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்...
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார்.
இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது.
விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது.
தற்...
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள்,
முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய...
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார்.
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களில் கைதேர்ந்தவர் சிம்பு.
இருப்பினும் சிம்புவின் மீது பல விமரசனங்கள் வைக்கப்பட்டு வந்தது. படங்களில் சற்று கவனம் செலுத்த தவறிய சிம்பு திடீரென அவரின் உடல் எடை அதிகரித்தது.
2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அ...