செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் சர்ப்ரைசாக ஆஜரான நடிகை பாவனா!

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் சர்ப்ரைசாக ஆஜரான நடிகை பாவனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவை முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் 7 நாள்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதன் தொடக்க விழாவில் நடிகை பாவனா பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் வெளியிடப்படாத நிலையில், அவர் திடீரென விழா மேடைக்கு வருகை தந்தார். பாவனாவை "symbol of fight" என தயாரிப்பாளர் ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் பாவனாவை வரவேற்றனர். மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார். கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் என பாவனாவுக்கு புகழாரம் சூட்டினார். நிகழ்...
ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை. ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது...
இலங்கையில் பேப்பர் இல்லாததால் சுமார் 30 லட்சம் மாணவர்களின் தேர்வு ரத்து!

இலங்கையில் பேப்பர் இல்லாததால் சுமார் 30 லட்சம் மாணவர்களின் தேர்வு ரத்து!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  இலங்கையில் பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் போதுமான டாலர்கள் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேப்பரை பொருத்தளவில் அவை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் பேப்பரை இறக்குமதி செய்வதற்கு போதுமான டாலர்கள் இல்லாததால் பேப்பருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன இதுகுறித்து இலங்கை கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வு நடத்துவதற்கு போதுமான பேப்பர் ...
”வாடிவாசல்” பட டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா!

”வாடிவாசல்” பட டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை புறநகரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். தொடர்ந்து நாவல்களை படமாக்கிவருகிறார் வெற்றிமாறன். லாக்கப் நாவலை விசாரணை என்றும், வெக்கை நாவலை அசுரன் என்றும் படமாக்கியவர், தற்போது விடுதலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இதுவும் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை படமாக்குகிறார். தனது படத்துக்கும் வாடிவாசல் என்றே பெயர் வைத்துள்ளார். முந்தைய நாவல்களை படமாக்குகையில் எப்படி நாவலுக்கு வெளியே கற்பனையாக கதையை எழுதி சேர்த்தாரோ அதுபோல் வாடிவாசல் நாவலிலும் வெற்றிமாறனே எழுதியிருக்கும் புனைவும் இடம்பெறுகிறது. சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ற்கனவே சூர்யா மாடுபிடிக்க பயிற்சி எடுத்துள்ளார். சென்னை இசிஆரில் வாடிவாசல் படத்தில் டெஸ்...
நடிகர் சங்க தேர்தல் நாசர்-விஷால்-கார்த்தி-பூச்சிமுருகன் கூட்டணி மீண்டும் அபார வெற்றி!

நடிகர் சங்க தேர்தல் நாசர்-விஷால்-கார்த்தி-பூச்சிமுருகன் கூட்டணி மீண்டும் அபார வெற்றி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கிய போது வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது. மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது. ஒரு கட்டத்தில் ராதிகா, விஷாலை சாதி ரீதியக அழைத்து சாதிய, மொழி சண்டைக்கு வித்திட சாதிய மற்றும் இனவாதம் நடிகர்களுக்கும் பிரதானப்பட்டது. எனினும் இந்த தேர்தலில் விஷா...
”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக, தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களை வீசிய வீடியோவும் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தற்போது சுப்பையா சண்முகம் கைத...
தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், வீடியோ
தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham   https://youtu.be/Je_7Ymy9bsk   சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு 14.9.1957 அன்று கீழத்தூவலில் 5 பேரை போலீசார் படுகொலை செய்த சம்பவம் நீங்காத வடுவாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. உயிரிழந்தவர்களுக்கு ராமநாதபுரம் கீழத்தூவலில் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழத்தூவலில் 1957ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவமணி, சித்திரவேல், ஜெகநாதன், முத்துமணி, தவசியாண்டி ஆகிய 5 பேரை விசாரணை எனக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களின் கைகளை, கண்களைக் கட்டி சுட்டுக் கொன்றனர். நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு கீழத்தூவல் கிராமத்தில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. இந்த படுகொலை காமராஜர் ஆட்சி...
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி   https://youtu.be/60rtDfn_1gM
மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் வரும் மார்ச்-31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவ...
நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி!

நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் ...