சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்...
‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது...
இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையால் புது படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிட்டார்கள். ஆனால் எதிர்பாராத அளவு எல்லாமே ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்களின் வரவேற்பால் ஷோவின் எண்ணிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டமும் தியேட்டர்களில் அலைமோதுகிறது இந்த சந்தோஷமான செய்தி இன்னொரு குஷியான செய்தியை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இயக்குமாறு ரசிகர்கள் அளவில்லா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நான் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஒரு போஸ்டரை ட்விட்டரில் வெளியீட்டு தனுஷை டேக் செய்திருந்தார் செல்வராகவன். அதை ரீட்டு...
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இந்த புத்தாண்டை தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. தனது உடல்  எடையை 30 கிலோ குறைத்து  படு பிஸியான நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இயக்குநர் சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், 'மாநாடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களின் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இதற்கிடையே ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிம்புவின் 'ஈஸ்வரன்' வெளியாகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக, சிம்புவும் அவரது நண்பர் மஹத்தும் காசிக்கு சென்று, புத்தாண்டு தினத்தில் விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர். தான் வழிபாடு செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சிம்பு, "இறைவன் ஈஸ்வரனுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இயக்குநர் ராமின் புதிய படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற எதிர்பார்ப...
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் "மலர்" பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மலர்" டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு "திடீர் தளபதி" சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
தனுஷ் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா!

தனுஷ் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா! தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட்டில் அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார்,  சாரா அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது Quarantine-ல் இருப்பதாக தெரிவித்துள்ளார். https://twitter.com/aanandlrai/status/1344519382085599232?s=20...
புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர்

புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://twitter.com/vijayantony/status/1344563680927567872?s=20 நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழில் மெட்ரோ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார் ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது...
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’. கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தை ஜனவரி 1...
லீக்கான வலிமை பட புகைப்படம்!

லீக்கான வலிமை பட புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லீக்கான வலிமை பட புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது  இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ ...