நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’
நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’
மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.
‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப...









