சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்...









