திரைப்படங்கள்
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!
தமிழ் நடிகர்களில் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்கள் ஒரு சிலர்தான். மேக்கப் போடுவதற்கே பல மணி நேரம் செலவழித்து அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் வரிசையில் விஜய்சேதுபதியும் இணைந்து கொண்டார்.
கதைக்கு கதை வித்தியாச கேரக்டர்கள் தேர்வு செய்யும் விஜய் சேதுபதியின் இப்போதைய தேர்வு பாலாஜி தரணிதரணின் புதிய படமான சீதக்காதி.
மிக வித்தியாசமான கதைக்களமாக உருவாக உள்ள சீதக்காதியில் விஜய்சேதுபதி இளவயது 30, நடுத்தர வயது 50, முதிர்ந்த வயது 75 என 3 கேரக்டரில் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதிக்கு மேக்கப் போட ஹாலிவுட் பிரபல மேக்கப் கலைஞர் க்ரெக் கெனான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மேக்கப் போட்டதற்கு 3 முறை ஆஸ்கார் விருது வென்றவர்.
இந்த படத்தில் நாடக நடிகர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர...
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!
அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “இந்த படத்தில் ராம கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா. இந்த இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.. “இது செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்க...
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘மதுரவீரன்’ பட பாடல்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம், வீடியோ
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தில் ‘என்ன நடக்குது நாட்டுல’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.
https://youtu.be/6yzZPzwLZwc
சமீபத்தில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் குறித்து இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறும்போது,
‘‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர், ‘‘என்ன நடக்குது நாட்டுல’ என்று தொடங்கும் பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இப்போது அந்த பாடல் மக்களிடம் சென்றடைந்துள்ளது.
அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு...
ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கும் படம் ‘நிமிர்’. மலையாள ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட புரொடக்ஷன் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றுள்ளது.
https://youtu.be/Us4SdcEh--4
‘நிமிர்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘நிமிர்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்
லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதை காண்பதற்காக கீர்த்திசுரேசுடன் அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் விஷால், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பை காண குடும்பத்தினர் வந்ததால் கீர்த்திசுரேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
கீர்த்திசுரேஷ் சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைக்கு வந்துள்ளது. இப்போது விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’ விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஏ.ஆர்.முரு...
சமூக அவலத்தை அழுத்தமாக பதிக்கும் தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்
பியூனாக வேலை பார்பவர் மகனோ மகளோ அதே ஆபீசில் ஆபீசாரக பதவிக்கு வரமுடியாது அதற்கு மேலதிகாரிகள் இடம்தராமல் சூழ்ச்சியால் தகுதியிருந்தாலும் தட்டிக்கழித்து விடுவார்கள் என்ற ஒரு வரியையும், அரசு வேலைகளில் சேர திறமையை விட லஞ்சம்தான் முக்கியம் என்ற ஒரு வரியையும் எடுத்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வடிவமைத்திருக்கிற படம்தான் தானாசேர்ந்த கூட்டம்.
அயன் படத்தில் பார்த்த அதே துறுதுறு சூர்யா. ரொம்ப ஜாலியாக வந்து போகிறார். பெரிய அலட்டல் உருட்டல் அடிதடி கலாட்டாக்களை தவிர்த்து மிக திறமையாக தன் கதாபாத்திரத்தை சூர்யா எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மூவ் நடக்கும்போதும் சூர்யா சிக்கிக் கொண்டார் என நினைக்க வைத்து அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சிவன்.
சூர்யாவுக்கு பொருத்தமான கதையாக தேர்வு செய்து அவரை அதற்கேற்றார்போல வேலைவாங்கி சூர்யா குட்வில் புத்தகத்தில் விக்னேஷ்சிவன் தனக்க...
பழைய கதை… காமெடி முயற்சி குலேபகாவலி – விமர்சனம்
கிராம கோயிலில் தாத்தா புதைத்து வைத்த விலைமதிக்க முடியாத புதையலை ஆள் வைத்து கொள்ளை அடிக்கும் அர்தபழைய கதைதான் என்றாலும் முழுக்க முழுக்க காமெடியாக முயற்சிக்கிறது குலேபகாவலி டீம்.
சிலை திருடும் பிரபுதேவா கும்பல், சின்னசின்ன 420 வேலைகளில் ஈடுபடும் ஹன்சிகா, அசந்த நேரம் ஆட்டைய போடும் ரேவதி கூட்டணி அமைத்து குலேபகாவலியை அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் ரேவதியின் கதாபாத்திர பெயர் மாஷா... அரங்கேற்றவேளை படத்தில் இதேபோன்று 420 வேலைகளில் ஈடுபடும் ரேவதியை அப்படியே வயசாக்கி ஏமாற்றுவதிலும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு நன்றிகடனோ என்னவோ ஒரு காட்சியில் அரங்கேற்றவேளை வி.கே.ராமசாமி படமாக வந்து போவார்.
பிரபுதேவா வழக்கமான துறுதுறு ரோல். டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பல பரிணாமங்களில் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்.
ஹன்சிகா அழகாக வருகிறார். கவர்ச்சியாகவும், தங்கை பாசத்திலும் மாறுபட்டு க...
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் - விமர்சனம்
தவணையில் எடுக்கும் வண்டிகளுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு எடுத்து வரும் கேரக்டர் விக்ரம்.
அப்படி வண்டி எடுக்கப்போன இடத்தில் தமன்னாவை பார்க்கிறார்... பக்கென காதல் பற்றிக்கொள்கிறது... அடிதடியில் இருக்கிற விக்ரம் ஐயர் பெண் தமன்னா காதல் கைகூடியதா... வில்லன்கள் என்ன செய்கிறார்கள்... யார் வில்லன் என்பதுதான் ஸ்கெட்ச் கதை.
ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
விக்...


