விவசாயிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று தெரிகிறது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் இன்று 37-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று முன்தினம் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 7-ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. 2 கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு விட்டது என மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளதால் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி எல்லையில் போராட்ட நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று செய்தியாளர்க...









