ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் –  காவல்துறை தடை

மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் – காவல்துறை தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை 2021 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்த வரையில் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பகுதிகளில் ஆண்டுதோறும் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆனால், இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தளர்வுகள் என சமீபத்தில் தான் மக்கள் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பக்கம் எல்லாம் நேர விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களை போலீஸார் அனுமதி அளித்தனர். ஆனால், புத்தாண்டு தினத்தின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்பதால் மக்களுக்கு பீச் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது...
அசாருதீன் MP சென்ற கார், கவிழ்ந்து விபத்து!

அசாருதீன் MP சென்ற கார், கவிழ்ந்து விபத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமாக செயல்பட்ட முகமது அசாருதீன் சென்ற நான்கு சக்கர வாகனம் ஒன்று, கோர விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் அசாருதீன், பெரிதாக காயம் இல்லாமல் தப்பித்துவிட்டார் என்று காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாருதீன், கார் ஒன்றில் ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று மாதபோர் மாவட்டத்தைக் கடந்து, சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அசாருதீன் சென்ற கார், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் அசாருதீனுக்கோ, அசாருதீனுடன் பயணம் செய்த மூன்று பேருக்கோ பெரிதாக எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் கார் கவிழ்ந்த இடத்திற்கு அருகிலிருந்து உணவகத்தின் ஊழியர் ஒருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டதாக தகவல். விபத்துக்குப் பின்னர் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள...
முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு – மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு

முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு – மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு என  மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகளை ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறியதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டமன்ற தேர்தலில்  வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க   தேர்தல் ஆணையம் ஒரு முடிவு செய்துள்ளது.  தற்போது,  தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை சுமார் 67,000 உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பதற்கான திட்டம் தயாரித்து வருகிறோம். அதனால், தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை 95 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு ...
உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான பாதிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான பாதிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இன்னமும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல உலக நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் மியூட்டேட் அடைந்து இரண்டாவது அலையாக முன்பை விட வீரியத்துடன் பரவ தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. பல நாடுகளும் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டன. பிரிட்டன் தான் உலகிலேயே முதலில...
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் – கே.பி. முனுசாமி

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் – கே.பி. முனுசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நேற்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய தலைமை முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தான் நிறுத்துகிறது. ஓ. பன்னீர்செல்வம் கூறிய வேதவாக்கும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றார். பின்னர் பொங்கல் பரிசு டோக்கன்களில் அமைச்சர்கள் படம் பொறிக்கப்பட்டிருக்கும் சர்ச்சைகளுக்க பதிலளித்த அவர், அரசு அதிகாரிகள் மூலமாக மட்டுமே பொங்கல் பரிசு டோக்கன் விநியோகிக்கப்பட்டதாக கூறினார். புதிதாக கட்சி தொடங்கும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்ட...
மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!

மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன கட்சிகள். அப்படி அதிமுக விளம்பரம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமானதுதான் சன் குழுமம். அதன் முக்கிய சேனலான சன் டிவியில் இப்படியான விளம்பரம் ஒளிபரப்பானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் குரலெழுப்பியுள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட...
ஏசு நாதரை சுட்டது கோட்சேங்க..! ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஏசு நாதரை சுட்டது கோட்சேங்க..! ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் போது, இப்படியான கருத்தைக் கூறினார் அமைச்சர் சீனிவாசன். அவர் பேசுகையில், ‘பொங்கல் பரிசு, 2,500 ரூபாயை அதிமுக அரசு கொடுத்தா தப்புன்றாங்க. முதலமைச்சர் அறிவிச்சாரு. அதை அமைச்சர்கள் செயல்படுத்தி வர்றாங்க. 2,500 ரூபாயோட வேட்டி, சேலைனு எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா மூவாயிரம் ரூபாய் வரும். இது மக்களுக்கான நலத்திட்ட உதவி. இதை நாங்க செஞ்சா திமுக, தப்பு தப்புனு சொல்றாங்க. அவங்க செஞ்சிருந்தா சரியா இருந்திருக்கும். அவங்க இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தா புத்தரோட வாரிசு, ஏசுநாதர் வாரிசுன்னு சொல்லியிருப்பாங்க. இப்ப நாங்க செஞ்சதால ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுனு சொல்வாங்க...
நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தன. இதனால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் ஆன்லைனிலேயே சுங்கக்கட்டணத்தை செலுத்தி விட்டு, சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லலாம். இத்தகைய ஃபாஸ்ட் டேக் முறையானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாகவும், எனவே ஃபாஸ்ட் டேக் பதிவு செய்து, அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்காக சுங்கச்சாவடிகள், ஆன...
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் தனித்துவிடப்படும்  பாமக!

திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் தனித்துவிடப்படும் பாமக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட,  ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் பாமக தனித்துவிடப்படும் நிலை பாமக சிறப்புப் பொதுக்குழுவில் அதிமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு முடிவுகள் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், தொகுதி பேரத்தை அதிகப்படுத்த தனித்துப்போட்டி என்று சில மிரட்டல் பேச்சுக்கள் மட்டும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுகவின் கதவுகள் பாமகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த நிலையில் அதிமுக அணியில் சேருவதைத் தவிர பாமகவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. சிறப்புப் பொதுக்குழுவில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லையென்றும் கூட்டணிப் பேச்சுகளை நடத்த பாமக தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறை...