தனுஷ் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா!
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட்டில் அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது Quarantine-ல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/aanandlrai/status/1344519382085599232?s=20...
https://twitter.com/vijayantony/status/1344563680927567872?s=20
நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழில் மெட்ரோ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்
ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது...
மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு. தனது சகோதரி மகன் ஜேசன் அபியின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சகோதரி மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார்.
சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட ...
2020-ம் ஆண்டு, தான் கடந்து வந்த பாதை மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அமலா பால்.
அமலா பால் இந்த ஆண்டு சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனது கற்றல்களை '2020 - அந்த ஆண்டு' என்ற தலைப்பில் பகிர்ந்துக் கொண்டார். இந்த ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான், என்று அமலா குறிப்பிட்டுள்ளார்.
"சரியில்லை என்பது சரியில்லை என்று நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்வது சரியில்லை. சரி? குணப்படுத்துதல் ஏற்றுக்கொள்வதில் தான் தொடங்குகிறது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார் அமலா.
https://twitter.com/Amala_ams/status/1344304475352141824?s=20
வாழ்க்கை தனது பாதையில் வீசிய அன...
குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’.
கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை ஜனவரி 1...
லீக்கான வலிமை பட புகைப்படம்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ ...
ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க முடிவு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் அங்கு சென்றார். அவரைத் தொடர்ந்து நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் அங்கு சென்றனர்
கொரோனா பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது படக்க...
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை படத்தின் அப்டேட்
பிகில் படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளில் கேப்டனாக வரும் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார் அமிர்தா ஐயர். தமிழ் சினிமாவில் தெனாலிராமன் லிங்கா போக்கிரி ராஜா தெறி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின் படைவீரன் காளி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்துள்ளார்.
இன்று காலை முதல் வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் டுவிட்டரில் டிரெண்ட் பண்ணிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில் அமிர்தா ஐயர் இவ்வாறு லீக் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளார்கள்
அதுபோல அவர் வெளியிட்டுள்ள வீடி...
2020-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் விராட் கோலி பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா கர்பமான செய்திதான் என ட்விட்டர் அறிவித்தது. அந்த அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் குழந்தை பிறக்கும் செய்தி மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
விரைவில் அம்மாவாகப்போகும் அனுஷ்கா ஷர்மா உலகப் பிரபலமடைந்த வோக் பத்திரிக்கைக்கு நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அதாவது 2021 ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகப்போகும் வோக் இந்தியா பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்கான நேர்காணலை அனுஷ்கா அளித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் அனுஷ்கா தன்னுடைய கர்ப்பகால நாட்கள் குறித்து பேசியுள்ளார். பிறக்கப்போகும் குழந்தை மீது அனுஷ்காவும், விராட் கோலியும் கொண்டிருக்கும் அன்பு குறித்தும், உறவினர்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கணவர் விரா...