செவ்வாய்க்கிழமை, ஜூலை 21
Shadow

REVIEWS

காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம்

காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம் ரொம்ப நாளைக்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கம்... ரொம்ப நாளைக்கு பிறகு விமல் ஹீரோயிசம் இரண்டும் இணைந்திருக்கிற படம் மன்னர் வகையறா. இதுல ஒரு புதுசு என்னன்னா ஹீரோயிசம் பண்ணும் விமலே படத்தையும் தயாரிச்சி தயாரிப்பாளரா புரமோட் ஆகியிருக்கார். ஜாதி பெருமைகள் பேசுற ஊர் கதையை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பூபதிபாண்டியன். ஒரு வரி கதைன்னு சொல்லணும்னா ‘வக்கீல் ஆக பரிட்சை எழுதிட்டு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் விமல் தன் அண்ணனின் காதலை சேர்த்து வைக்க முயற்சித்து தன் காதலை இழக்கிறார். கடைசியில் விமல் காதல் கைகூடியதா கை நழுவியதா இதுதான் கதை கரு. நல்ல காமெடியனாக வளர்ந்து வரும் ரோபோ சங்கர் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொண்டிருந்து திடீரென வேறு பல காமெடியன்களின் மேனரிசங்களை முயற்சித்து காமெடி பண்ண முயற்சித்து பாவம் படம் பார்க்கிறவர்களை...
ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் - விமர்சனம் மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் ரீ – மேக் தான் நிமிர். உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத் ஆகியோர் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைப்பில் சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளியாகியிருக்கும் படம் நிமிர். தென்காசியில் ஒரு சிறிய ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்திக்கொண்டிருக்கும் நேஷனல் செல்வத்தை (உதயநிதி) ஒரு சிறிய சண்டையில், பலர் முன்பு அடித்துத் துவைத்துவிடுகிறான் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி). அவனைத் திரும்பவும் அடித்து வீழ்த்தும்வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என சபதமேற்கிறான் செல்வம். இந்த சூழலில்...
தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள்
ஒத்த வார்த்தை உசுர அறுக்கும்ணு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு... அப்படி அப்பா சொன்ன ஒரு வார்த்தையால ஒரு உசுரு போக காரணமான நண்பனின் வலி மிகுந்த கதைதான் வீரத்தேவன். இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்னு சொல்லுவாங்களே அந்த தில் முதல் படத்துலயே அறிமுக ஹீரோ கவுஷிக் கோபாலனுக்கும், வில்லனா நடித்திருக்கும் ஹீரோவின் நிஜ அப்பா கோபாலனுக்கும் ரொம்பவே இருக்கு. பையன் அறிமுகம் ஆகும் முத படத்துல முத சீனே ஹீரோவ உசுரா பழகின நண்பனே கரகரன்னு கழுத்தறுத்து கொன்னா... நெனச்சி பாக்கவே அடிவயிரு பகீர்னு இருக்கில்ல... இப்படித்தான் தொடங்குது வீரத்தேவன்... படத்தோட பேருக்கேத்த மாதிரியே பட ஆரம்பமே தேவர் ஜெயந்தியில போடுற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மாதிரி ஒரு பாட்டு வச்சி அங்கிட்டு இங்கிட்டு நகர விடாம சீட்ல உக்கார வைக்கும் இயக்குனர். முதல் படம்னு எந்த டென்ஷனும் இல்லாம அடிச்சி ஆடுற ஹீரோ கவுஷிக் கோபாலன். நல்லவனா வில்லனான...
சமூக அவலத்தை அழுத்தமாக பதிக்கும் தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

சமூக அவலத்தை அழுத்தமாக பதிக்கும் தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
பியூனாக வேலை பார்பவர் மகனோ மகளோ அதே ஆபீசில் ஆபீசாரக பதவிக்கு வரமுடியாது அதற்கு மேலதிகாரிகள் இடம்தராமல் சூழ்ச்சியால் தகுதியிருந்தாலும் தட்டிக்கழித்து விடுவார்கள் என்ற ஒரு வரியையும், அரசு வேலைகளில் சேர திறமையை விட லஞ்சம்தான் முக்கியம் என்ற ஒரு வரியையும் எடுத்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வடிவமைத்திருக்கிற படம்தான் தானாசேர்ந்த கூட்டம். அயன் படத்தில் பார்த்த அதே துறுதுறு சூர்யா. ரொம்ப ஜாலியாக வந்து போகிறார். பெரிய அலட்டல் உருட்டல் அடிதடி கலாட்டாக்களை தவிர்த்து மிக திறமையாக தன் கதாபாத்திரத்தை சூர்யா எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மூவ் நடக்கும்போதும் சூர்யா சிக்கிக் கொண்டார் என நினைக்க வைத்து அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சிவன். சூர்யாவுக்கு பொருத்தமான கதையாக தேர்வு செய்து அவரை அதற்கேற்றார்போல வேலைவாங்கி சூர்யா குட்வில் புத்தகத்தில் விக்னேஷ்சிவன் தனக்க...
பழைய கதை… காமெடி முயற்சி குலேபகாவலி – விமர்சனம்

பழைய கதை… காமெடி முயற்சி குலேபகாவலி – விமர்சனம்

REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
கிராம கோயிலில் தாத்தா புதைத்து வைத்த விலைமதிக்க முடியாத புதையலை ஆள் வைத்து கொள்ளை அடிக்கும் அர்தபழைய கதைதான் என்றாலும் முழுக்க முழுக்க காமெடியாக முயற்சிக்கிறது குலேபகாவலி டீம். சிலை திருடும் பிரபுதேவா கும்பல், சின்னசின்ன 420 வேலைகளில் ஈடுபடும் ஹன்சிகா, அசந்த நேரம் ஆட்டைய போடும் ரேவதி கூட்டணி அமைத்து குலேபகாவலியை அதகளப்படுத்தியிருக்கிறார்கள். இதில் ரேவதியின் கதாபாத்திர பெயர் மாஷா... அரங்கேற்றவேளை படத்தில் இதேபோன்று 420 வேலைகளில் ஈடுபடும் ரேவதியை அப்படியே வயசாக்கி ஏமாற்றுவதிலும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு நன்றிகடனோ என்னவோ ஒரு காட்சியில் அரங்கேற்றவேளை வி.கே.ராமசாமி படமாக வந்து போவார். பிரபுதேவா வழக்கமான துறுதுறு ரோல். டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பல பரிணாமங்களில் நன்றாகவே வளர்ந்திருக்கிறார். ஹன்சிகா அழகாக வருகிறார். கவர்ச்சியாகவும், தங்கை பாசத்திலும் மாறுபட்டு க...
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் - விமர்சனம் தவணையில் எடுக்கும் வண்டிகளுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு எடுத்து வரும் கேரக்டர் விக்ரம். அப்படி வண்டி எடுக்கப்போன இடத்தில் தமன்னாவை பார்க்கிறார்... பக்கென காதல் பற்றிக்கொள்கிறது... அடிதடியில் இருக்கிற விக்ரம் ஐயர் பெண் தமன்னா காதல் கைகூடியதா... வில்லன்கள் என்ன செய்கிறார்கள்... யார் வில்லன் என்பதுதான் ஸ்கெட்ச் கதை. ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். விக்...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

CINI NEWS, MOVIES, REVIEWS, டிரைலர்கள், திரைப்படங்கள்
அன்பான அக்காவையும், மாமாவையும் கொடூரமாக கொல்லும் கந்து வட்டி கும்பலை அவர்களோடு ஒருவனாக பழகி பழி வாங்க நினைப்பதே உள்குத்து. தலைப்பு ரொம்ப அழுத்தமாக இருக்கிறது. அந்தளவுக்கு படம் இருக்கிறதா... முட்டம் என்ற மீனவக் குப்பத்தின் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) அதே பகுதியில் பில்டப்பில் காலத்தை ஓட்டும் சுறா சங்கர் (பால சரவணன்) தன் வீட்டுக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் அவரது தங்கை கடலரசியும் அவனது பாட்டியும் உள்ள அந்தச் சிறிய குடும்பத்தில் இணைகிறான் ராஜா. அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்கா மணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) படகு செய்யும் தொழில் செய்துகொண்டே கந்து வட்டி தொழிலையும் செய்துவருபவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, ச...
வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக ...