தனுஷ் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா!
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட்டில் அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது Quarantine-ல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/aanandlrai/status/1344519382085599232?s=20...
https://twitter.com/vijayantony/status/1344563680927567872?s=20
நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழில் மெட்ரோ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்
ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது...
குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’.
கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை ஜனவரி 1...
லீக்கான வலிமை பட புகைப்படம்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ ...
ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க முடிவு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் அங்கு சென்றார். அவரைத் தொடர்ந்து நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் அங்கு சென்றனர்
கொரோனா பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது படக்க...
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை படத்தின் அப்டேட்
பிகில் படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளில் கேப்டனாக வரும் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார் அமிர்தா ஐயர். தமிழ் சினிமாவில் தெனாலிராமன் லிங்கா போக்கிரி ராஜா தெறி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின் படைவீரன் காளி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்துள்ளார்.
இன்று காலை முதல் வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் டுவிட்டரில் டிரெண்ட் பண்ணிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில் அமிர்தா ஐயர் இவ்வாறு லீக் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளார்கள்
அதுபோல அவர் வெளியிட்டுள்ள வீடி...
தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது.
வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட...
நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
*மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ*
காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும்.
ட்ரைலர் : http://amzn.to/MaaraTrailer
திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது
இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் 'மாறா' படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம்
அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒர...